யாழ். பல்கலை மாணவர்களில் பவானந்தன்,சொலமன் ஆகிய இருவரும் இன்று விடுதலை?

jaffna-universityஇராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வெலிகந்த மையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரில் இருவர் இன்று செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்படவுள்ளனர் என்று பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் தலைவர் பவானந்தன் மற்றும் விஞ்ஞான பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவரான சொலமன் ஆகிய இருவருமே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 30ம் திகதி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட மேற்படி மாணவர்கள் வவுனியா குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கிருந்து வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்துக்கு மாற்றப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கு சுமார் இரண்டு மாதங்களாக அங்கு புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில் அவர்களில் இருவர் இன்றைய தினம் விடுவிக்கப்படவுள்ளனர்.

இவர்களை அழைத்து வருவதற்காக பல்கலைக்கழக நிர்வாகப் பிரிவைச் சேர்ந்த இருவர் வெலிகந்தைக்கு பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீரெலோ காரியாலத்தின் மீது பெற்றோல் குண்டு வீசினார்கள், புலிகளுக்கு சார்பான சுவரொட்டிகளை ஒட்டினார்கள் மற்றும் புலிகளுக்கு சார்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor