யாழ். பல்கலை. மாணவர்களின் வீடுகளுக்கு சென்று விசாரணை செய்யும் சீ.ஐ.டியினர்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைதானதையடுத்து விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள் அங்கிருந்து வெளியேறி தங்கள் வீடுகளுக்குச் சென்றிருக்கும் நிலையில் அவர்களின் வீடுகளுக்கு படைப் புலனாய்வுப்பிரிவினர் சென்று அவர்களை விசாரணை செய்து மிரட்டல் விடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அறியவந்துள்ளதாவது:

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது இலங்கை இராணுவத்தினரும்,பொலிஸாரும் மற்றும் சீ.ஜ.டி பிரிவினரும் நடத்திய தாக்குதலையடுத்து பல்கலைக்கழகத்தில் அசாதாரண நிலை தோன்றியுள்ளது.

இதனால் பல மாணவர்கள் பல்கலைக்கழகத்தை விட்டு தமது சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர்.

இவ்வாறு வடமராட்சி கிழக்கு மாணவர் சிலர் தமது வீடுகளுக்கு சென்றிருந்த நிலையில் அங்கு சென்ற இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவினர் அவர்களை விசாரணை செய்ததாகவும் உடனே பல்கலைக்கழகத்துக்கு சென்று விடுமாறும் அச்சுறுத்திவிட்டு சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்துள்ளன.

Recommended For You

About the Author: Editor