யாழ் பல்கலை மாணவர்களின் காண்பியக் கலைக்காட்சி!

யாழ் பல்கலைக்கழக மூன்றாம் வருட கலைத்துறை மாணவர்களின் காண்பியக் கலைக்காட்சி யாழ் பல்கலைக்கழக கலைப்பீட புதிய கட்டடத்தில் நேற்று மாலை 3.00 மணிக்கு மூத்த ஓவியர் ம.கனகசபை அவரடகள் நாடா வெட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதமவிருந்தினராக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரும், பேராசிரியருமாகன வசந்தி அரசரத்தினம் கலந்து கொண்டார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் ஒவ்வொருவரதும் இரண்டு தொடக்கம் மூன்று ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள 23 மாணவரகளால் வரையப்பட்ட ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாது இங்கு காட்சிப்படுத்தப்பட்டள்ள ஆக்கங்களில் மட்டக்களப்பு பிரதேசத்தில் கல்விகற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவான அன்பரசன் யுத்தகாலத்தில் தன்னுடைய பாடசாலையில் வெடிகொழுத்தி சரஸ்வதி பூயை கொண்டாடும் போது பாடசாலைக்கு அருகாமையில் நடைபெற்ற வெடிவிபத்தின் போது எவ்வாறு தனக்கு பக்கத்தால் வெடித்த வெடிகுண்டின் பாகங்கள் போனது என்பதை காட்டும் ஒவியம் காட்சிப்படுத்தியிருந்தார்.

அது மட்டுமல்லாது தர்சிகாவினுடைய காதலர்கள் இருவரது வெளிமனம் எப்படி இருக்கும் உள்மனம் எப்படி இருக்கும் என்பதனை காட்டும் ஒவியமும், அபிராமி குடித்துக்கொண்டு இருந்த கோப்பியை பேப்பர் ஒன்றில் ஊற்றி விட்டு அதற்கு உருவம் கொடுத்த காட்சியும் பாத்திமா பர்ஸானாவின் பெருநாள் காடசி என 23 மாணவரகளது எண்ணங்களில் தோன்றியவற்றுக்கு உயிர்கொடுத்து கண்கவர் ஒவியங்களாக தீட்டி காட்சிப்படுத்த பட்டிருந்தது.

நேற்று ஆரம்பித்த இந்த கண்காட்சி தொடர்ந்து வரும் (19.05.2013) ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

Uni-art-exbi (4)

Uni-art-exbi (3)

Uni-art-exbi (2)

Uni-art-exbi (1)