யாழ். பல்கலை மருத்துவபீடத்தின் ‘சுகவாழ்வை நோக்கி’ மருத்துவக் கண்காட்சி

யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தினால் ‘சுகவாழ்வை நோக்கி’ என்ற தொனிப்பொருளில் மாபெரும் மருத்துவக் கண்காட்சி ஒன்று நடத்தப்படவுள்ளது.யாழ். பல்கலைக்கழக மருத்துவ பிரிவின் ஏற்பாட்டில் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 26ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியினை யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரெட்ணம் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

பாடசாலை மாணவர்கள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள் உள்ளிட்ட பலரும் இக்கண்காட்சியினைப் பார்வையிட முடியுமென யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடம் அறிவித்துள்ளது