யாழ். பல்கலை நாளை ஆரம்பம்

jaffna-universityயாழ். பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளை நாளை செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவ ஆலோசகர் புஸ்பரட்ணம் தெரிவித்தார்.யாழ். பல்கலைக்கழக உப வேந்தர் வசந்தி அரியரட்ணம் தலைமையில் பல்கலைக்கழக அனைத்து பீட பீடாதிபதிகள் மற்றும் மாணவ தலைவர்கள் உள்ளிட்டோருக்கு இடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

இதன்போதே நாளை 8ஆம் திகதி முதல் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.இதேவேளை, கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக நான்கு மாணவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவர் என அவர் மேலும் தெரிவித்தார்