யாழ்.பல்கலை, நல்லூர் ஆலய சூழலில் இராணுவம் குவிப்பு

army-univerயாழ்.பல்கலைக்கழக வாளகத்தினைச் சுற்றியுள்ள வீதிகள் மற்றும் இடங்களில் இராணுவத்தினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் நேற்று சனிக்கிழமை தொடக்கம் பதற்றமான நிலைமை காணப்படுகின்றது.

முள்ளி வாய்க்கால் நினைவு தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை, பல்கலைக்கழகத்தில் அந்த அனுஷ்டிப்பு நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்குடனே இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஸ்டிப்பது தொடர்பாக யாழ்.பல்கலைகழக ஆசிரியர் சங்கம் மற்றும் மாணவர் ஒன்றியம் என்பன அறிக்கை விட்டிருந்த நிலையில் பல்கலைக் கழகத்தைச் சூழ இராணுவத்தினரும் பொலிஸாரும் நிலை கொண்டுள்ளமை அங்கு பதற்றமான சூழ்நிலையினை உருவாக்கியுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்.பல்கலைக்கழக வாளகத்தினைச் சுற்றியுள்ள வீதிகள் மற்றும் இடங்களில் பாதுகாப்பு படையினர் தற்போதும் நிலைகொண்டிருக்கின்றனர்.

இதே வேளை நல்லூர் ஆலய வளாகத்திலும் படைத்தரப்பின் கனரக வாகனங்களுடன் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதையும் காணமுடிகின்றது.

Related Posts