யாழ். பல்கலையைச் சுற்றி இராணுவம் குவிப்பு

jaffna_university_2009யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தினைச் சுற்றி பெருமளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், யாழ்.மாவட்டத்திலுள்ள வீதிகளில் வழமைக்கு மாறாக இராணுவத்தினர் இன்று இரவு தொடக்கம் வீதிச்சோதனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

வாகனங்களில் கொண்டு வந்து இறக்கப்படும் இராணுவத்தினர் ஒவ்வொரு வீதிகளிலும் கடுமையான சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவீரர் தினத்தினையொட்டி ஏதாவது அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்படலாம் என்ற சந்தேகத்திலேயே இராணுவத்தினர் பல்கலைக்கழகத்தில் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதுமட்டுமன்றி முல்லைத்தீவு மாவட்டத்திலும் இறுதி யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களிலும் இராணுவரத்தினர் நேற்று முதல் கடும் சோதனைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.