யாழ். பல்கலையில் கைகலப்பு

jaffna-universityயாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே இன்று புதன்கிழமை நண்பகல் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில் கலைப் பீட இறுதியாண்டு மாணவர்களுக்கும் முதலாம் வருட மாணவர்களுக்கும் இடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிய வருகின்றது.

இதன்போது ஆங்காங்கே முகாமைத்துவ பீட மற்றும் கலைப்பீட ஆண் பெண் விரிவுரையாளர்கள் பலர் கலைப்பரிவு இறுதியாண்டு மாணவர்கும்பல் ஒன்றால் தகாத வார்த்தைகளால் பேசப்பட்டதாகவும் சில விரிவுரையாளர்கள் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது

அத்துடன் மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோதலுக்கான காரணம் இன்னும் அறியமுடியவில்லை