யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

யாழ். பல்கலைக்கழகத்தின் 28 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா இன்று யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஆறு அமர்வுகளாக யாழ். பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சிவசூரிய தலைமையில் நடைபெறுகிறது.

இன்று காலை 8.30 மணிக்கு யாழ். பல்கலைக்கழக இராமநாதன் அக்கடமிக்கு முன்பாக இருந்து ஊர்வலம் ஆரம்பமாகி யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கை வந்தடைந்ததனைத்தொடர்ந்து யாழ். பல்கலைக் கழகத்தின் 28 ஆவது பட்டமளிப்பு விழாவின் முதலாம் அமர்வு ஆரம்பமாகியது.

convocation

convocation_2

இன்றைய விழாவில் வேந்தர், உபவேந்தர் ஆகியோருக்கு வழங்கப்படுகின்ற கொடி, குடை, ஆலவட்டம் போன்றன வழமைக்கு மாறாக இம்முறை நீக்கப்பட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

முன்னைய ஆண்டுகளில் நடைபெற்ற பட்டமளிப்பு வைபவங்களில் வேந்தர், உபவேந்தர் ஆகியோருக்கு வழங்கப்படுகின்ற கொடி, குடை, ஆலவட்டம் முதலானவை பிடிக்கப்படுவது வழக்கம் எனினும் யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இந்த நடைமுறையினை நிறுத்துமாறு பல்கலை நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுத்ததையடுத்து இம்முறை குறித்த நடைமுறை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரிடம் கேட்டபோது,

ஆண்டான்- அடிமை முறையில் இருக்கக் கூடிய அடையாள சின்னமாக இருக்கும் இத்தகைய கொடி, குடை, ஆலவட்டம் முதலானவை பிடிக்கப்படுவது இம்முறையும் எதிர்வரும் காலங்களிலும் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாக்களில் விலக்கிக் கொள்ளுமாறு பல்கலை நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அத்துடன் நிகழ்வினைச் சிறப்பிக்கும் முகமான வரவேற்பு முறைகளை பின்பற்றுமாறும் நிர்வாகத்தினரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தோம் அதனையும் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றனர்.

Related Posts