யாழ். பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் நேரில் ஆராய்வதற்காக துணைவேந்தர் உள்ளிட்ட குழுவினரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்புக்கு அழைத்துள்ளார்.
இந்த சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 16ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து பல்கலைக்ழகத்தின் சில பீடங்கள் தற்போது வரை இயங்காதிருக்கின்றன.
குறிப்பாக விஞ்ஞானப்பீடம் இதுவரை மீள ஆரம்பிக்காது கடந்த 17 நாட்களாக மூடப்பட்டுள்ளது.
எனவே இவ்வாறு மூடப்பட்டிருக்கும் பீடங்களை மீள ஆரம்பிக்கும் நோக்கில் மேற்கொள்ளவேண்டிய வழிகள் தொடர்பில் ஆராய்வதற்கே ஜனாதிபதியிடமிருந்து இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பிற்காக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயும் அழைக்கப்பட்டுள்ளார்.