யாழ். பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் மீது தாக்குதல்

Jaffna-University1நல்லூர் – செம்மணி வீதியில் குடித்து விட்டு கும்மாளம் போட்ட யாழ் பல்கலைக்கழக சட்ட பீட சிங்கள இன மாணவர்கள் இருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந் தெரியாத நபர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளார்கள்.

சம்பவமானது நேற்றிரவு 9 மணியளவில் நடைபெற்றுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இத் தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் எதற்காக இவர்களைத் தாக்கினார்கள் என்ற விடயம் வெளியே தெரியவரவில்லை.

சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

தென்பகுதியைச் சேர்ந்த யாழ்.பல்கலைக்கழக சட்ட பீட மாணவர்கள் மீதே இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இவர்களின் பாதுகாப்புக்காக யாழ்.போதனா வைத்தியசாலை பொலிஸ் பிரிவு ஒரு பொலிஸ் உத்தியோகத்தரை கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

Recommended For You

About the Author: Editor