யாழ் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைத்துறை மாணவர்கள் போராட்டம்

arts-unionயாழ் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைத்துறையின் சித்திரமும் வடிவமைப்புத் துறை மாணவர்கள் நேற்றய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

குறித்த துறையின் கல்விச் செயற்பாடுகள் கடந்த 23ம் திகதி ஆரம்பிக்கப்படுவதாக பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில்,நேற்றுடன் 20 நாட்களாகியும் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவில்லை. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றய தினம் பல்கலைக்கழக வளாகத்தில் பல்வேறு பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுவரை காலமும் இணைப்பாளராக பணியாற்றி வந்தவர் பதவி விலகியதைத் தொடர்ந்து இப்பிரச்சனை எழுத்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்

மேலும் இப்பிரச்னைக்கு கூடிய விரைவில் தீர்வு ஒன்று வழங்கப்படும் என நிர்வாகத்தினர் நேற்று காலை குறித்த துறை மாணவர்களுக்கு அறிவித்துள்ள நிலையிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை காலமும் இணைப்பாளராக பணியாற்றி வந்தவரே மீண்டும் இணைப்பாளராக வர வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தே இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்போராட்டத்தில் சித்திரமும் வடிவமைப்பு துறையினைச் சேர்ந்த மாணவர்கள் ஓழுங்கு செய்திருந்த போதிலும் அதிகளவான மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.