யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

uni-anjalyயாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று காலை 11 மணி தொடக்கம் 12.30 மணிவரையில் மாணவர்களால் உணர்வுபூர்வமாக நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வு யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைந்துள்ள சிவன் ஆலயத்தின் முன்பாக கையில் தீபங்கள் ஏந்தி உணர்வு பூர்வமாகவும் மிகவும் அமைதியான முறையிலும் இடம்பெற்றுள்ளதுடன், சிவன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளும் நடத்தப்பட்டிருக்கின்றது.

மேலும் இந்த நிகழ்வில் பேராசிரியர்கள் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு தொடர்பில் நினைவுப் பேருரைகளையும் நிகழ்த்தினர்.

கடந்தாண்டு மாவீரர் தினத்தின் பின்னர் பல்கலைக்கழகத்தின் குரல்வளை நசுக்கப்பட்டிருக்கும் நிலையில் மிகவும் அமைதியாகவும், நம்பகமான மாணவர்களையும், பேராசிரியர்களையும் ஊடகவியலாளர்களையும் கொண்டு இந்த நினைவு நாள் நடைபெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி

யாழ்.பல்கலைக்கழத்திலிருந்து சிங்கள மாணவர்கள் வெளியேறினார்கள்! இராணுவம் குவிப்பு! மாணவா்கள் பதற்றம்

Recommended For You

About the Author: Editor