யாழ் பல்கலைக்கழகத்திலுள்ள முறைகேடுகளை எதிர்த்து யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கம் மற்றும் யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆகியன இணைந்து போராட்டம் ஒன்றை இன்று வெள்ளிக்கிழமை நடத்தினர்.
யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கத்தின் நியமன முறைகேடுகள் தொடர்பாகவும், யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்க நியமனம் மற்றும் நிதிமுறைகேடுகள் தொடர்பாகவும் அதிருப்தி தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, முறைகேடுகளை விசாரிக்க தனிக்குழு அமைக்க பட வேண்டும் எனவும் விசாரணைகள் மிக துரிதமாக நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
விசாரணைகள் தாமதப்படுத்தப்பட்டால் அடுத்து வரும் நாட்களில் யாழ்.பல்கலைகழக ஆசிரியர் சங்கம் மற்றும் மாணவர்களையும் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.