யாழ்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 3 மாணவர்களை யாழ் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை யாழ் நீதிமன்ற நிதிபதி இழஞ்செழியன் பிறப்பித்துள்ளார்.
கடந்த மாதம் யாழ் பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கலை, முகாமைத்துவம் மற்றும் வர்த்தகப் பிரிவுகளை சேர்ந்த 3 மாணவர்களே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.