யாழ். பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பட்டமளிப்பு விழா

graduationயாழ்.பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் இன்று தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இம்முறை பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 1369 பேர் பட்டங்கள் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

முதல் நாள் அமர்வுகளில் 707 பேருக்கும் இரண்டாம் நாள் அமர்வில் 662 பேருக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தருக்கான விண்ணப்பங்கள் பத்திரிகை வாயிலாக கோரப்பட்ட நிலையில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணத்தின் இறுதிப் பட்டமளிப்பு விழா இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.