யாழ். பரு. ஹாட்லி கல்லூரி மாணவன் கணித பிரிவில் மாவட்டத்தில் முதலிடம்! தேசிய மட்டத்தில் 3ம் இடம்!

exam_deptநேற்றிரவு வெளியிடப்பட்ட 201ம் ஆண்டுக்கான க.பொ.த.ப. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் பா. கபிலன் கணிதப் பிரிவில் 3 ஏ பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தையும், தேசிய மட்டத்தில் 3-ம் இடத்தையும் பெற்றுள்ளார்.

வேம்படி மகளிர் கல்லூரி மாணவி விதுர்ஷா மகேந்திரராசா கணிதப் பிரிவில் 3 ஏ சித்தியுடன் மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மாணவி மிதுரிகா மிகுந்தன் உயிரியல் பிரிவில் 3 ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரி மாணவன் எம்.சிவறொசான் வர்த்தகப் பிரிவில் ஆங்கில மொழி மூலத்தில் 3 ஏ பெற்று யாழ்.மாவட்ட நிலையில் முதலிடம் பெற்றுள்ளார்.

பரீட்சை பெறுபேறுகளை அறிவதற்காக மாணவர்கள் மற்றும் பெற்றோர் நேற்றிரவு முந்திக் கொண்டதில் இணைய வழித்தகவல் பரிமாற்றத்தில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பாடசாலைகளின் பெறுபேறுகளை உடனடியாகப் பெறமுடியவில்லை.

கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தின் தயாளினி மகேந்திரம் வர்த்தகப் பிரிவில் 3ஏ சித்தி பெற்றுள்ளார்.

அருணோதயாக் கல்லூரி பெறுபேற்றில் வர்த்தகப் பிரிவில், ம.மதீபன் 3 ஏ, செல்வி கி.குஜாலா 3 ஏ, செல்வி செ.வைஷாளிகா 3பி, கலைப் பிரிவில், த.காயத்திரி 3ஏ, ச.கீர்த்திகா 3 பியும் பெற்றுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பெறுபேறுகளின் அடிப்படையில்,

கிளிநொச்சி மத்திய கல்லூரியின் கணிதப் பிரிவில் அமிர்தலிங்கம் அருட்திரன் 3ஏ, அமிர்தலிங்கம் நிறோசன் 3ஏ, முருகானந்தம் ரகுராம் 3ஏ, வர்த்கப் பிரிவில் அருண்தவராசா அசிந்தா 3ஏ,

பளை மத்திய கல்லூரி வர்த்தகப் பிரிவு எஸ்.வினோத் 3ஏ,

கிளிநொச்சி இந்துக் கல்லூரி வர்த்தகப் பிரிவு யுவராஜ் கஜீபன் 3ஏ,

கிளிநொச்சி மகா வித்தியாலயம் வர்த்தகப் பிரிவு ஆறுமுகம் சசிகுமார் 3ஏ, குமாரசிங்கப்பிள்ளை கார்த்திகா 3ஏ, விஜயரத்தினம் கௌசிகா 3ஏ,

கனகபுரம் மகா வித்தியாலயம் வர்த்தகப் பிரிவு டில்லி நாதன் நிறோசாந் 3ஏ, பக்திநாதன் பவிதரன் 3ஏ,

இராமநாதபுரம் மகா வித்தியாலயம் வர்த்தகப் பிரிவு நவரத்தினம் சந்திரிகா 3ஏ,

புனித திரேசா பெண்கள் கல்லூரி- வர்த்தகப் பிரிவு இராஜரட்ணம் கோபிகா-3ஏ

இதேவேளை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கணிதப் பிரிவில் 8 பேர் -3 ஏ, 9 பேர் -2 ஏ பியும்,

வர்த்தகப் பிரிவில் 6பேர் 3ஏ, 5 பேர் 2 ஏ பியும்,

உயிரியல் பிரிவில் 10பேர் 2 ஏ பியும் பெற்றுள்ளனர்.

இதில் கணிதப் பிரிவில் 3 ஏ சித்தி பெற்றோர்:
சிவஞானம் அமுதீசன்,
மகேஸ்வரன் கஜீபன்,
அகிலதாஸ் விமோசனன்,
கணேசலிங்கம் தனபாலன்,
திருச்செல்வம் ஜெனதன்,
குணரத்தினம் சுஜிபன்,
பாஸ்கரகுருக்கள் ஜெனார்தனசர்மா,
விக்னேஸ்வரன் மகிலன்.

வர்த்தகப் பிரிவில் 3ஏ பெற்றோர்:
குணசீலன் கௌதமன்,
சிவகுமார் பிரசாத்,
பாஸ்கரன் ரணிஜன்,
புஸ்பராஜா ஜென்சி,
கேதீஸ்வரன் துசியந்தன்,
ஜெயதாஸ் வேணுகரன்.

Recommended For You

About the Author: Editor