யாழ் நெடுஞ்சாலையில் பெருகிவரும் சோதனைச் சாவடிகள்! ஆயுதம் தரித்த படையினர்!: மக்கள் மத்தியில் பதற்றம்

யாழ்ப்பாணம்- கண்டி வீதியில் நேற்று மாலை முதல் படையினர் வாகனச்சோதனை மற்றும் பதிவு நடவடிக்கைளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் நிலையில் மக்கள் மத்தியில் பெரும் பதற்றநிலை தோன்றியுள்ளது.குறித்த வீதியில் 75மீற்றருக்கு ஒரு இடத்தில் “நிறுத்து” என்ற அறிவுறுத்தல் பலகையுடன் காத்திருக்கும் படையினரும், இராணுவ பொலிஸாரும் வாகனங்களை நிறுத்தி சோதனையிடுவதுடன், வாகனம், மற்றும் பயணிகள் தொடர்பில் பதிவுகளையும் செய்கின்றனர்.

இதேபோல் ஆனையிறவு பகுதியில் ஏற்கனவே நிரந்தரமாக அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முற்றாக மூடப்பட்டிருந்த நிலையில் மாலை 6 ணிக்குப் பின்னர் அந்த சோதனைச் சாவடியிலும் வாகனங்கள் சோதனையிடப்படுகின்றது.

எனினும் இந்த திடீர் சோதனை நடவடிக்கை எதற்காக மேற்கொள்ளப்படுகின்றது என்பது குறித்து எந்த தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை. மேலும் யுத்தகாலத்தினைப் போன்று ஆயுதங்களுடன் படையினர் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றமை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

மேலும் இராணுவ பொலிஸார் பதிவு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமை எதற்காக என்ற பலத்த சந்தேகமும் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor