யாழ் நூலகத்திற்கு இந்திய துணைத்தூதுவரால் புத்தகங்கள் பரிசளிப்பு!

யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு பதில் இந்திய துணைத் தூதுவர் எஸ்.டி.மூர்த்தி புத்தகங்களை பரிசளித்தார். நேற்று முன்தினம் (12) இடம்பெற்ற இந்நிகழ்வில் புத்தகங்களை பிரதம நூலகர் திருமதி சதாசிவமூர்த்தியிடம் கையளித்தார்.

india-libe-moorthy

இந்த நிகழ்வில் உரையாடிய பதில் இந்திய துணைத் தூதுவர் எஸ்.டி.மூர்த்தி இலங்கையின் சிறந்த பொது நூலகமாக தெரிவு செய்யப்பட்டு அரசினால் வழங்கப்பட்ட சுவர்ண புரவர விருதினைப் பெற்றமைக்காக வாழ்த்தினை தெரிவித்ததுடன் மேலும் இலங்கை அரசினால் விசேட பரிசில்கள் பெற்ற நூலகங்களான கோண்டாவில் மற்றும் அனலைத்தீவு பொது நூலகங்களுக்கும் புத்தகங்கள் பரிசளிக்கப்படவுள்ளன என தெரிவித்தார்.

india-libu

தொடர்புடைய செய்தி

யாழ் நூலகத்திற்கு சுவர்ண புரவர விருது!