யாழ்.நீதிமன்ற நீதிபதிக்கு திடீர் இடமாற்றம்

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் வவுனியா மேல் நீதிமன்றிற்கு திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நீதிச்சேவை ஆணைக்குழுவினால் எதிர்வரும் 17 ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் நீதிபதி பிரேம்சங்கருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் யாழ். மேல் நீதிமன்றத்திற்கு திருமதி. சிவபாதசுந்தரம் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.