யாழ்.நிலாவரையில் தொல்லியல் திணைக்களம் மீண்டும் அகழ்வு நடவடிக்கையில்!!

யாழ்.வலி,கிழக்கு பிரதேசசபைக்குட்பட்ட புத்துார் – நிலாவரை பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினர் இன்று மீண்டும் அகழ்வு பணிகளை தொடங்கியிருப்பதால் பதற்றமான சூழல் நிலவுகின்றது.

நிலாவரை கிணற்றை அண்மித்த பகுதியில் கடந்த மாதம் தொல்லியல் திணைக்களத்தினர் அகழ்வு பணிகளை மேற்கொண்டிருந்த நிலையில் பொதுமக்கள் எதிர்ப்பினால் பணிகள் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்றைய தினம் மீளவும் குறித்த பகுதிக்கு வந்துள்ள தொல்லியல் திணைக்களத்தினர் அகழ்வு பணிகளை ஆரம்பித்த நிலையில் வலி,கிழக்கு பிரதேசசபை தவிசாளர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

இதனையடுத்து தொல்லியல் திணைக்களத்தினர் தவிசாளருக்கு எதிராக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளநிலையில் தவிசாளரை விசாரணைக்கு வருமாறு பொலிஸார் அழைத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor