யாழ். பண்ணை சுற்றுவட்டம், யாழ்.நங்கை உருவச் சிலையும் 18.06.2012 முற்பகல் 10 மணியளவில் யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. யாழ்.மாநகர சபை முதல்வராக இருந்த அல்பிறட் துரையப்பாவின் நினைவாக இந்தச் சுற்றுவட்டம் புனரமைக்கப்பட்டு யாழ்.நங்கை உருவச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.இதற்கென அல்பிறட் துரையப்பா குடும்பத்தைச் சேர்ந்தோர் ஒரு லட்சம் ரூபா நிதி வழங்கியிருந்தனர். இந்த நிகழ்வில் முன்னாள் முதல்வர் அல்பிறட் துரையப்பா குடும்ப உறுப்பினர் நவரத்தினராசா நினைவுக்கல்லை திரைநீக்கம் செய்துவைத்தார்.
- Sunday
- December 8th, 2024