யாழ்.நகர் அங்காடிக் கடைத் தொகுதி திறப்பு

muslim1யாழ்.நகரில் அமைக்கப்பட்ட இரண்டாவது யாழ்.அங்காடிக் கடைத் தொகுதி சனிக்கிழமை மாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர சபை உறுப்பினர் சுபியான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, மற்றும் மாநகர சபை உறுப்பினர் சரப்புள் அனாம், மாநகர உத்தியோகஸ்தர்கள், வியாபாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்த கடைத்தொகுதியில் 29 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கடையும் 50 ஆயிரம் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்டுள்ளதுடன் இவை 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்பப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor