நடைபாதை வியாபாரத்தில் உள்ளூர் வர்த்தகர்களுக்கு தடை; தென்பகுதி வர்த்தகரின் ஆதிக்கம் மாநகர சபை பாரபட்சம்

யாழ்.போதனா வைத்தியசாலைக்குக்குச் செல்லும் பிரதான வீதியோரங்களில் நடைபாதை வியாபாரிகளின் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதனால் பொதுமக்க்ள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.நடைபாதை பகுதியில் அமர்ந்திருந்து பெருமளவான தென்பகுதி வர்த்தகர்கள் தமது வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதனால் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பொது மக்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இப்பகுதியானது பொதுமக்கள் நடமாட்டம் கூடிய பகுதியாக காணப்படுவதனாலும் பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடைஞ்சலாகவும் இருப்பதனால் இப்பகுதியில் வர்த்தாக நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் உள்ளூர் வியாபரிகள் நடைபாதையில் வியாபரம் செய்வதற்கு எதிராக யாழ். மாநகர சபையினால் பல்வேறு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்த நிலையில் தற்போது தென்பகுதி வர்த்தகர்களின் வியாபார நடவடிக்கையினை பாராமுகமாக இருப்பதாக உள்ளூர் வியாபாரிகள் சிலர் விசனம் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webadmin