யாழ். திருநெல்வேலி பகுதியில் பாவனையற்ற வளவுக் கிணற்றிருந்து ஒரு தொகுதி ஆயுதங்களைப் படையினர் மீட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.ஆயுதங்களை படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்தே ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் 2006ம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் புலிகளின் செயற்பாடுகளும், நடமாட்டமும் நிறைந்திருந்தன. இந்நிலையில் இந்தப்பகுதியிலிருந்து முன்னரும் ஆயுதத் தொகுதிகள் மீட்கப்பட்டிருந்தன.
இந்நிலையிலேயே, இன்று மாலை திருநெல்வேலி அம்மன் கோவிலை அண்டியுள்ள பாவனையற்ற வளவுக் கிணற்றில் ஆயுதங்கள் இருப்பதாக அங்குவந்த படையினர் மக்களிடம் கூறியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, அந்தக் கிணற்றை சோதனையிட்ட படையினர் அங்கிருந்து ஆயுதங்கள் சிலவற்றை மீட்டிருக்கின்றனர். எனினும் மீட்கப்பட்ட ஆயுதங்கள் குறித்த தகவல்கள் எவையும் தெரியவரவில்லை.