யாழ் டேவிற் வீதியில் உள்ள வீடொன்றிலிருந்து நகைகள் கொள்ளை

Theft_Plane_Sympol-robberyயாழ் டேவிற் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து நகைகள் நேற்று கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

டேவிற் வீதியைச் சேர்ந்த குடும்பத்தினர் வெளியில் சென்றிருந்த வேளை, கதவு உடைக்கப்பட்டு பத்துப் பவுண் நகைகள் மற்றும் 22 ஆயிரம் ரூபா பணம் ஆகியன திருடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக யாழ் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டதாகவும் குறிப்பிட்டார்.

நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.