Ad Widget

யாழ் சிறையில் காரைக்கால் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்!

யாழ்ப்பாணம் சிறையில் கடந்த 40 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள காரைக்கால் மீனவர்கள் தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி திடீர் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் திகதி காரைக்கால் அருகே உள்ள டி.ஆர்.பட்டினத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கணேஷ்குமார், பிச்சைபாண்டி, முகமதுகான், ரகுமான்கான் ஆகியோர் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

குறித்த நால்வரும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். குறித்த 4 மீனவர்களையும், 113 படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப் படகு மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டமும், கடலில் இறங்கி ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

இந்நிலையில், கடந்த 40 நாட்களாக யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி 4 மீனவர்களும் திடீர் உண்ணாவிரதம் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக மேலும் செய்திகள் கூறுகின்றன.

Related Posts