யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
நாவற்குழி எனுமிடத்தில் வைத்தே இன்றிரவு 10.45 மணியளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலினால் பேருந்தின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.
தாக்குதலில் பயணிகளுக்கு எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை. என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.