யாழ்- கொழும்பு அதிவேக நெடுஞ்சாலைக்கு சீனா உதவி

mahintha-namaal-chinaகொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான வடக்கு அதிவேக நெடுஞ்சாலை உட்பட இலங்கையின் பாதை வலையமைப்பிற்கு சீன அரசாங்கம் நிதியுதவிகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளது.

இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையில் சீனாவில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது இதற்கான இணக்கம் எட்டப்பட்டதாகவும். இது தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.