யாழ். குடாநாட்டில் பாதீனியச்செடி மிகவும் வேகமாக பரவி வருகின்ற போதிலும் அதனை அழிக்கும் நடவடிக்கைகள் உரிய தரப்பினரால் மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது.
கடந்த பல வருடங்களாக யாழ். குடாநாட்டில் பாதீனியம் பரவி வருகின்றது. குறிப்பாக வலிகாமம் மற்றும் தென்மராட்சிப் பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றது.
இந்தப் பயிர் ஏனைய பயிர்களின் உற்பத்தித் திறனைக் குறைக்கும் வகையில் நிலத்தின் பசளையை உறிஞ்சுவதாகவும் காணப்படுகின்றது .
இன்று பாதீனியம் பொது இடங்கள், பாடசாலை வளாகங்கள், மைதானங்கள், திணைக்கள வளாகங்கள், பொது மக்களுடைய தோட்டங்கள், வீடுகள் என எல்லா இடங்களிலும் பரவிவருகின்றது.
பாதீனியச் செடி அழிக்கப்பட வேண்டும் எனக் கூறி அரசினால் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் உரிய அதிகாரிகள் இதனை அழிப்பதற்கான நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்காது அசட்டையீனமாக இருந்து வருகின்றனர் என்று விவசாயிகள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகின்றது.