யாழ் குடாநாட்டில் தீவுப் பகுதிகளுக்கு பாதுகாப்பான புதிய படகு சேவை

யாழ் குடாநாட்டில் உள்ள தீவுப் பகுதிகளுக்கு படகு போக்குவரத்தை பாதுகாப்பாக மேற்கொள்வதற்கு புதிய படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த புதியத் திட்டத்திற்கு 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார். ஊர்காவற்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

படகு பயணத்தில் ஈடுபடும் பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு விசேட காப்புறுதித் திட்டமொன்றும் அறிமுகப்படுத்தப்படும். உத்தேச புதிய படகுச் சேவைக்கான நேர அட்டவணையொன்றும் தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

நீண்டகாலமாக யாழ் மாவட்ட மக்கள் பாதுகாப்பற்ற படகுச் சேவைகளை மேற்கொண்டு வந்துள்ளனர் இதனால் பல அனர்த்தங்கள் ஏற்பட்டன. இதனை கருத்திற் கொண்டே புதிய பாதுகாப்பான படகுச் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் அர்ஜுண ரணதுங்க குறிப்பிட்டார்.

நாட்டின் அனைத்து பகுதிகளையும் சமமாக அபிவிருத்தி செய்வதில் சமகால அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor