யாழ். கல்வி கோட்ட அலுவலங்கள் திறப்பு

யாழ். கல்வி வலயத்தின் மீள் நிர்மாணிக்கப்பட்ட நல்லூர் கோட்ட அலுவலகம், மற்றும் யாழ். கோட்ட கல்வி அலுவலகம் உட்பட புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அலுவலகம் என்பன நேற்றய தினம் திறந்துவைக்கப்பட்டன.

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலனினால் திறந்து வைக்கப்பட்ட இப்புதிய கட்டிடங்கள், நல்லூர் செம்மனி வீதியிலுள்ள மாகாண கல்வி வளாகத்தினுள் அமைந்துள்ளன.

இந்நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளர் ப.விக்கினேஸ்வரன் உட்பட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.