Ad Widget

யாழ்.ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் பல திட்டங்கள் தொடர்பில் ஆராய்வு!

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் மீள்குடியேற்றம், சுகாதாரம், கல்வி, விவசாயம், போக்குவரத்து, நீர் விநியோகம், மின்விநியோகம், உள்ளூராட்சி, வீடமைப்பு, வர்த்தகம் மற்றும் தொழிற்துறை உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளன. அத்தோடு சில திட்டங்களுக்கான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபோதே குறித்த விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

அத்தோடு, எதிர்வரும் 2017ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தவுள்ள திட்டங்களுக்கான அனுமதியினை பெறுவதற்கான அறிக்கையையும் திட்ட வரைபையும் யாழ்.மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.மோகனேஸ்வரன் முன்மொழிந்தார்.

குறித்த திட்ட வரைபுகள் ஆராயப்பட்டு அனைவரின் ஒத்துழைப்புடனும் அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், ஈ.சரவணபவன், மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் தவராசா, வட மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Related Posts