இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் – புறக்கோட்டை வரையிலான பஸ் சேவை நாளை வியாழக்கிழமை (25) முதல் இரத்மலானை வரையில் விஸ்தரிக்கப்படவுள்ளதாக கோண்டாவில் போக்குவரத்து சாலை முகாமையாளர் எஸ்.குலபாலசெல்வம் இன்று புதன்கிழமை (24) தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்து சபையால் இதுவரை யாழ்ப்பாணத்திலிருந்து புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் வரை பஸ் சேவை இடம்பெற்று வந்தது. வெள்ளவத்தை வரை இந்த பஸ் சேவையை நடத்துமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
அதற்கமைய, இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகளுடன் கலந்துரையாடி சேவையை நீடிப்பது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டு, வியாழக்கிழமை (25) முதல் இரத்மலான வரை பஸ் சேவை இடம்பெறவுள்ளது.
இந்த விஸ்தரிப்பின் போது, தினமும் மாலை ஆறு மணிக்கு இரத்மலானையில் இருந்து புறப்படும் பேருந்து காலி வீதி ஊடாக புறக்கோட்டையை சென்றடைந்து, அங்கிருந்து இரவு 8 மணிக்கு யாழ்ப்பாணம் நோக்கி புறப்படத் தயாராகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.