யாழ் இந்து ஆரம்ப பாடசாலையின் புதிய அதிபர் தெரிவுக்கு எதிர்ப்பு

Jaffna_Hindu_Collegeயாழ் இந்து ஆரம்ப பாடசாலைக்கு புதிய அதிபரை நியமிப்பதற்கான நேர்முகத் தேர்வு உரியமுறையில் மேற்கொள்ளப்படவில்லை என பாடசாலை சமூகம் குற்றஞ்சாட்டியுள்ளதுடன் தமது எதிர்ப்பினையும் வெளியிட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் கடமையில் இருந்த அதிபர் ஓய்வு பெற்றுச் சென்றதையடுத்து புதிய அதிபரை நியமிப்பதற்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றதுடன் புதிய அதிபர் நேற்றைய தினம் தனது கடமையினையும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதற்கமைய நேர்முகத் தேர்வு நீதியானதாக நடைபெறவில்லை. அத்துடன் தகுதியடிப்படையில் விண்ணப்பித்தவர்கள் நேர்முகத் தேர்வுக்கும் அழைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தே பாடசாலை சமூகம் தற்போதைய அதிபரான மகேந்திரராஜாவை அதிபராக நியமித்தமைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இன்று பெரும்பாலான ஆசிரியர்கள் சுகவீன விடுப்பில் உள்ளதுடன் மாணவர்களின் வருகையும் குறைவாக காணப்பட்டுள்ளது.

இதேவேளை, நீதியான முறையில் நேர்முகத் தேர்வு நடாத்தப்பட்டு சிறந்ததொரு அதிபரை நியமிக்குமாறு கோரி
பாடசாலைச் சமூகத்தினர் வடக்கு மாகாண கல்வி அமைச்சருக்கு மகஜர் ஒன்றினையும் நேற்று வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.