யாழ் இந்து ஆரம்பப்பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்

யாழ் இந்து ஆரம்பப்பாடசாலைக்கு யாழ் வலயக்கல்வித்திணைக்களத்தினால் புதிய அதிபராக திரு.நா.மகேந்திரராஜா நியமிக்கப்படதையடுத்து இவர் தனது கடமைப் பொறுப்புக்களை கடந்தவாரம் ஏற்றுள்ளார்.

jaffna-hindu-pri-principal

மாகாணக் கல்வித்திணைக்களத்தினால் கடந்த மே மாதம் நடாத்தப்பட்ட நேர்முகத்தேர்விற்கு அமைய இந்நியமனம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னைய அதிபர் ஓய்வுபெற்றுச் சென்றதையடுத்து இதுவரைகாலமும் நிரந்தர அதிபர் இன்றியே பாடசாலை இயங்கிவந்தது.புதிய அதிபரின் நியமனத்தினை தொடர்ந்து பாடசாலைச் செயற்பாடுகள் சுமூகமாக இடம்பெற்று வருகிறது.

யாழ் இந்துக்கல்லுாரியின் பழையமாணவரான திரு.நா.மகேந்திரராஜா அதிபர்தரம் 3 ஐச்சேர்ந்தவர். யாழ் சிறுப்பிட்டி அ.த.க பாடசாலையில் கடந்த மூன்றரை வருடங்கள் அதிபராக திறம்பட கடமையாற்றி அப்பாடசாலையின் பௌதீக வளம் மற்றும் மாணவரின் கல்வி அபிவிருத்தியில் மிகுந்த அக்கறை கொண்டு பல முன்னேற்றங்களை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்தி

யாழ் இந்து ஆரம்ப பாடசாலையின் புதிய அதிபர் தெரிவுக்கு எதிர்ப்பு