யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் ஆவரங்கால் சந்தியில் இன்று காலை 10.30 மணியளவில் மினி வான் – லொறி மோதி கொடூர விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவது –
பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற மினிவானும், யாழ்ப்பாணத்தில் இருந்து அச்சுவேலி நோக்கிச் சென்ற லொறியுமே நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 42 பேர் காயப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் சிலர் அச்சுவேலி பொது வைத்தியசாலையிலும், பலத்த காயங்களுக்கு ஆளானவர்களை அம்புலன்ஸ் மூலம் யாழ்ப்பாண பொது வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மினி வானில் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என 40ற்கும் மேற்பட்டோர் பயணம் செய்திருந்த போதும் தெய்வாதீனமாக யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை.
பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
படங்கள் நன்றி – ஷர்மிளா