‘யாழ்ப்பாண வாழ்வியல்’ நூல் வெளியிடப்பட்டுள்ளது

யாழ்ப்பாணத்து வாழ்வியலை பிரதிபலிக்கும் வகையில் யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறையினால் யாழ்ப்பாண வாழ்வியல் என்னும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் வரலாற்றுத் துறைத் தலைவர் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தலைமையில் நேற்று மாலை இவ்வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக பதில் துணைவேந்தர் பேராசிரியர் ச.சத்தியசீலன் நூலினை சம்பிரதாய பூர்வமாக வெளியிட்டு வைத்தார்.

சமஸ்கிருதத்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் வி.சிவசாமி, விஞ்ஞானபீட பீடாதிபதி பேராசிரியர் க.கந்தசாமி, வணிக பீட பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பி, வரலாற்றுத்துறை பேராசிரியர் செ.கிருஷ்ணராஜா அரசறிவியல் துறைத் தலைவர் வே.மணிவாசகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

jaffna_book_realss