covid-19யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 51, 52 மற்றும் 55 ஆவது படைப் பிரிவில் உள்ள இராணுவத்தினரால் சுன்னாகம், கொகுவில், சன்னகன்னை, தெல்லிப்பளை, நல்லூர், உடுவில், திருநல்வேலி, வல்வட்டிதுறை, கொடிகாமம், சாவகச்சேரி, அச்சுவேலி, நெல்லியடி, பளை, கோயில்வயல், ஐய்யகச்சி, முகாவில், முல்லியன், அம்பன், வெத்திலைகேணி, போக்கருப்பு மற்றும் மருதங்கேனி பிரதேசங்களில் பொது இடங்களில் கிருமிநாசிகளை விசிறினர்.
இந்த பணிகள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் புகையிரத நிலையங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகம், தபால் கந்தோர், வைத்தியசாலைகள், பஸ் தரிப்பு நிலையங்கள், மருந்து கடைகள் சேம நல நிலையங்கள்,பொருளாதார நிலையங்கள், தனியார் வங்கி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டன..