யாழ்ப்பாண திரையரங்கில் வெளியாகிறது இலவு குறும்படம்.

கிருத்திகன் ஜனனி நடிப்பில் கானா வரோ இயக்கத்தில் ரோஷன் நிரோஷ் ஒளிப்பதிவில் தர்சனன் இசையில் மாதவன் ஒளித்தொகுப்பில் விக்ரியேஷன் தயாரிப்பில் உருவான இலவு குறும் திரைப்படம் எதிர்வரும் 19ம் திகதி ஞாயிற்றுகிழமை யாழ்ப்பாணம் செல்லா திரையரங்கில் பிரம்மாண்டமான முறையில் வெளியாகவுள்ளது.

elavoe

யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட இக்குறும்படத்தில் கவிமாறன், ஷாலினி, தினேஷ், ரஞ்சித், வத்ஷங்கன் மற்றும்பலர் நடித்துள்ளதுடன் இதன் ப்ரோமோ பாடல் கவிஷாலினி குரலில் தர்சனன் இசையில் இரோஷ வரிகளில் ஏற்கனவே இணையத்தில் வெளியிடப்பட்டு பலத்த பாராட்டுகளை பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தின் குடும்பங்களில் நடக்கும் ஓர் விபரீத ஆசையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்ட குறும்படம் இலவு.

அனுமதி இலவசம் என்பதால் திரைத்துறை ஆர்வலர்கள் மக்கள் அனைவரையும் எதிர்வரும் 19ம் திகதி மாலை 3.00மணியளவில் செல்லா திரையரங்கிற்கு சென்று இலவு குறும்படத்தை காண வருமாறு படக்குழுவினர் வேண்டிநிற்கின்றனர்.