யாழ்ப்பாண இசைகளை அமெரிக்க மக்கள் விரும்புவார்கள்

Music-jaffna“யாழ்ப்பாணத்தில் நடைபெறும் இசை விழாவில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு அமெரிக்க மக்களும் ஆர்வப்படுவார்கள் “ என்று சர்வதேச அபிவிருத்திக்கான ஜக்கிய அமெரிக்காவின் முகவர் (யூஎஸ்எயிட்) நிறுனவத்தின் ஆசியாவிற்கான சிரேஸ்ட பிரதி உதவி நிர்வாகி டெனிஸ் றோலின்ஸ் தெரிவித்தார்.

‘இலங்கை ஒரு அழகான நாடு, அமெரிக்க மக்களும் இலங்கையின் அழகை ரசிக்கின்றனர். அழகான இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் இவ்வாறு இசை நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு அமெரிக்க மக்களின் சார்பில் நான் சந்தோசமடைகின்றேன்’ என்றும் அவர் கூறினார்.

‘இவ்வாறான நிகழ்ச்சிகள் மூலம் பாரம்பரிய இசைகளினை வளர்த்துக் கொள்வதுடன், இசையினை பரப்புவதற்கும் உறுதுணையாக இருக்கின்றது. இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு பிரேஸில், பங்களாதேஸ், இந்தியா, நோர்வே, பலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகளின் இசை கலைஞர்களின் பங்களிப்பு கிடைத்ததுடன் அவர்களுடன் இணைந்து யாழ்ப்பாணம் மற்றும் இலங்கை இசை கலைஞர்கள் இந்நிகழ்ச்சியினை நடத்துவது சிறப்பானது.

யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சியானது இரண்டாவது முறையாக நடைபெறுகின்றது. தொடர்ந்தும் நடைபெறுவதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் இருக்கும் என்று தான் நம்புவதாகவும்’ அவர் மேலும் கூறினார்.