யாழ்ப்பாண ஆலயமொன்றில் மீன் மழை பெய்துள்ளது

யாழ்ப்பாணம் – நல்லூர் வீரமாகாளி அம்மன் ஆலய வளாகத்தில் பெய்த மழைநீரில் மீன்களும் வந்து வீழ்ந்துள்ளது.

நேற்று மாலை தொடக்கம் அங்கு ´மீன் மழை´ பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையுடன் சில வகை மீன்களும் நிலத்தில் பரவலாக வந்து வீழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக நடைபெறுவதாக அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

அந்தப் பகுதியில் பெருமளவானோர் கூடி இந்த விடயத்தை வியப்புடன் அவதானித்து வருகின்றனர்.

Related Posts