“யாழ்ப்பாணம் வரவேற்கிறது” வளைவு மிக விரைவில் திறக்கப்படும்

jaffna-semmani-nameஏ – 9, செம்மணி பகுதியில் வீதி அகலிப்பு பணிக்காக அகற்றப்பட்ட யாழ்ப்பாணம் வரவேற்கின்றது வளைவு நல்லூர் பிரதேச சபையினால் மீள் நிர்மானபணிகள் நிறைவடைந்துள்ளது.

நல்லூர் பிரதேச சபையினால் இந்த வரவேற்பு வளைவு ஒரு மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு நிறைவடைந்துள்ளது.

வளைவினை மிக விரைவில் திறந்து வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.வசந்தகுமார் கூறினார்.