யாழ்ப்பாணம் மற்றும் கண்டியிலும் மேம்பாலங்களை அமைக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் – கிளாலி மற்றும் கண்டி – கெட்டம்பே ஆகிய பகுதிகளில் இரண்டு மேம்பாலங்கள் அமைக்கப்படவிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

வெளிவட்ட பெருந்தெரு அத்துருகிரியவுடன் தொடர்புபடும் வகையில் இராஜகிரிய ஊடாக களனி புதிய பாலம் வரை கொங்கிரிட் தூண்களைக் கொண்டு நிர்மாணிக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்கு நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர், இதன் கீழ் இராஜகிரிய ஊடாக வெளிவட்ட பெருந்தெருவில் அத்துருகிரிய இடைமாறு பிரதேசம் வரை கொங்கிரிட் தூண்களைக் கொண்டமைக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையால் சாத்தியவள ஆய்வுக்கற்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor