யாழ்ப்பாணம் கோணப்புலம் முகாம் பகுதியில் மோதல் ஒருவர் பலி

கோணப்புலம் முகாம் பகுதியில் ஏற்பட்ட குடும்பதகராறு கைகலப்பாக மாறியதில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபரிற்கும் அவரது உறவினர் ஒருவருக்கு இடையில் நீண்டகாலமாக குடும்ப தகராறு காணப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு குறித்த உயிரிழந்த நபரும் அவரது உறவினரும் கோணப்புலம் முகாம் பகுதியில் வைத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

தகராறு கைகலப்பாக மாற்றிய நிலையில் குறித்த நபர் மீது மற்றைய தரப்பினர் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இதன்போது அவரது தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டதையடுத்து குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது அளவெட்டி பகுதியை சேர்ந்த 36 வயதுடைய தேவராசா உதயகுமார் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்படுள்ளதுடன் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor