யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமான நடைப்பவணி புதன்கிழமை (23) காலை நடைபெற்றது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இருந்து ஆரம்பமாகிய இந்த நடைபவனியானது, காங்கேசன்துறை வீதி வழியாக சென்று மணிக்கூட்டு கோபுரத்தை அடைந்து, அங்கிருந்து கல்லூரி வீதி பலாலி வீதி சந்தியை சென்றடைந்து பலாலி வீதி வழியாக கந்தர்மடச் சந்தியை அடைந்து, அங்கிருந்து அரசடி வீதி வழியாக மீண்டும் பாடசாலையை சென்றடைந்தது.
கலை, கலாசார நடனங்கள், கல்லூரி அதிபர்களின் படங்கள், கல்லூரியின் பெருமை சாற்றும் விடயங்கள் என்பவற்றை தாங்கியவாறு இந்த நடைபவணி இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 125 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் முகமாக, இந்த நடைபவணி நடத்தப்பட்டுள்ளதுடன், ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக செவ்வாய்க்கிழமை (22) தொடக்கம் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கல்லூரியின் அதிபர், ஆசிரியர், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் ஆகியோர் இந்த நடைப்பவனியில் கலந்துகொண்டனர்.