ஆசியாவிலேயே குற்றங்கள் குறைந்த நாடாக இலங்கை காணப்படுகின்றதுடன் அதிலும் குறிப்பாக குற்றங்கள் குறைந்த மாவட்டமாக யாழ்ப்பாணம் காணப்படுவதாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான நிசங்க சமன் சிகரோ தெரிவித்துள்ளார்.
யாழ். பொலிஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘தென்னிலங்கையில் இடம் பெறும் குற்றங்களை விட மிகவும் குறைந்தளவிலேயே யாழ்ப்பாணத்தில் குற்றங்கள் இடம்பெறுகின்றதுடன், குற்றச் செயல்களுடன் தொர்புடையவர்கள் கைது செய்யப்பட்டும் உள்ளார்கள்.
மேலும் யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படுவதுடன் பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையிலுள்ள உறவுகளை பலப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும்’ அவர் மேலும் தெரிவித்துள்ளார்.