யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மோதல், கூட்டமைப்பு அதிர்ச்சி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலானது தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

காயமடைந்த மாணவர்கள் தொடர்பிலும், முன்னெச்சரிக்கையாக சில மாணவர்கள் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியமை தொடர்பாகவும் தாம் கவலையடைவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் சமூகத்துக்கிடையில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதனூடாக மாத்திரமே நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் போவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை இனிவரும் காலங்களில் அனுமதிக்கக்கூடாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விடுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்களை மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு வரவழைத்து பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் ஏனைய மாணவர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டு மெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேரிக்கை விடுத்துள்ளது.

Related Posts