யாழ்ப்பாணத்து ஊடகப் பரப்பில் புதிதாக மலர்ந்திருக்கிறது”மலரும்.கொம்”

பரபரப்புக்குப் பஞ்சமேயில்லாத யாழ்ப்பாணத்து ஊடகப் பரப்பில் புதிதாக மலர்ந்திருக்கிறது”மலரும்.கொம்” என்ற புதிய செய்தி இணையம். அதன் பிரதம ஆசிரியராக இருந்து வழிநடத்துபவர் முன்னாள் உதயன் பத்திரிகையின் ஆசிரியர். சீ.என்.வித்தியாதரன்.

malarum-com

மலரும்.கொம் இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வில் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இந்துக் கல்லூரி வீதி, யாழ்ப்பாணத்தில் அமையப் பெற்றுள்ள இவ்விணையத்தள அலுவலகத்திற்கு அமைச்சர் அவர்கள் இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டார்.

தரணியெங்கும் வாழும் தமிழர்களை தாயகத்திலிருந்து இணைக்கும் தளமென்ற மலரும்.கொம் இணையத்தளம் யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படவுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் அவர்கள், துறைசார்ந்தோருக்கு தமது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

malarum-com2

இதன்போது இந்தியத் துணைத் தூதுவர் மகாலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதன், யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, அமைச்சரின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.வி குகேந்திரன் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Related Posts