யாழ்ப்பாணத்தில் 1000 கைதிகளை அடைத்துவைக்கக்கூடிய சிறைச்சாலை அமைக்கப்படவுள்ளது!

யாழ்ப்பாணத்தில் பாரியளவிலான சிறைச்சாலையொன்று அமைக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சிறைச்சாலை சுமார் 1000 கைதிகளை அடைத்துவைக்கக்கூடிய வகையில் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் முதகற்கட்டப் பணிகள் நிறைவடைந்துவிட்டதெனவும், இதன் இரண்டாம் கட்டப் பணிகளுக்காக சுமார் 623 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நிர்மானிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சுமார் 130 கைதிகளை தடுத்து வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts